ஹைதராபாத் முஷீராபாத் பகுதியில் உள்ள பங்களாதேஷ் மார்க்கெட் அருகே, பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி கொடுக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம் தெருக்களிலும் சாக்கடைகளிலும் ஆறாக ஓடியதாகக் கூறப்படும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை வழக்கறிஞர் நீலம் என்பவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த அசுத்தமான காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​மதக் கோட்பாடுகளும் பாரம்பரியங்களும் மற்ற பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், சுகாதார சீர்கேட்டை உருவாக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே இப்படி இரத்தம் கலந்து ஓடியது, அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.