கோலிவுட்டின் எவர்கிரீன் கனவுக்கன்னி நடிகை த்ரிஷா, பாரம்பரிய உடையில் எடுத்த அழகான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், த்ரிஷாவின் அதே கியூட் தோற்றத்தை அப்படியே அச்சுப்பிசகாமல் ரீகிரியேட் (Recreate) செய்து அசத்தியுள்ளது ‘லூனா’ என்ற செல்ல நாய் குட்டி. த்ரிஷா அணிந்திருந்த அதே கலர் பட்டுப்புடவை, நகை மற்றும் தலையில் மல்லிகைப்பூ என அச்சு அசலாக த்ரிஷாவைப் போலவே போஸ் கொடுத்து லூனா குட்டி அசத்தியுள்ளது.
இந்த கியூட்டான வீடியோவை நடிகை த்ரிஷா ரசித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளி செம்ம வைரலாகி வருகிறது.
