சமூக வலைதளங்களில் விலங்குகளின் சுவாரசியமான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கால்பந்து போட்டி ஒன்றின் நடுவே சிறிய கன்றுக்குட்டி ஒன்று புகுந்து, வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மைதானத்தில் வீரர்கள் மிகுந்த தீவிரத்தோடு விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தகன்றுக்குட்டி உள்ளே நுழைந்தது. ஆரம்பத்தில் அது தானாக வெளியேறிவிடும் என்று அனைவரும் நினைத்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அது செய்த செயல் மைதானத்தில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.

 

 

வீரர்கள் பந்தை ஒருவருக்கொருவர் பாஸ் செய்து விளையாடியதைக் கண்ட அந்த கன்றுக்குட்டி, மிகுந்த உற்சாகத்தோடு பந்தின் பின்னால் ஓடத் தொடங்கியது. பந்து மைதானத்தின் எந்த மூலைக்குச் சென்றதோ, அதே திசையில் அந்த குட்டி கன்றுக்குட்டியும் வேகமாக ஓடி விளையாடியது. அதன் இந்த க்யூட்டான செய்கையைக் கண்டு வியந்த வீரர்கள், விளையாட்டைச் சற்று நேரம் நிறுத்திவிட்டு அதன் பாசமான சேட்டைகளை ரசிக்கத் தொடங்கினர்.

@mevoiceofbharat.in என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “இன்றைய போட்டியின் உண்மையான சூப்பர் ஸ்டார் இந்த கன்றுக்குட்டிதான்” என நெட்டிசன்கள் பலரும் இதற்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.