“என்னடா வயசு உனக்கு.. தம்மாத்தூண்டு ஆங்கர் தான்.. ஆனா அந்த பையனுக்கு பயமே கிடையாதுப்பா!” என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வாயடைத்துப் போய் வியக்கும் வகையில், ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து வெளுத்து வாங்கிய 15 வயது ‘பேபி மான்ஸ்டர்’ வைபவ் சூர்யவன்ஷியின் அசுரத்தனமான வெற்றியின் ரகசியத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் சக வீரர் துருவ் ஜூரல் உடைத்துள்ளார்!

“பயிற்சியில எல்லாரும் பந்தைப் பாருன்னு சொல்வாங்க, ஆனா பெரிய பவுலர் வந்தா நமக்குள்ள ஒரு நடுக்கம் வரும்; ஆனா இந்த சூர்யவன்ஷிக்கு பந்து வீசுறது கம்மின்ஸா இல்ல வேற யாராங்கிற கவலையே இல்லை, பவுலர பார்க்காம பந்தை மட்டும்தான் பார்ப்பான், எதற்கும் அஞ்சாத அவனோட அசாத்திய தன்னம்பிக்கைதான் அவனோட தாரக மந்திரம்” என்று துருவ் ஜூரல் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

அதேநேரம், “அவனுக்கு எதிராக லெக் ஸ்டம்பில் ஃபுல்லர் பந்துகள் வீசியும், விசித்திரமான ஃபீல்டிங் வியூகங்களை வகுத்தும் எங்களால அவனோட பேட் ஸ்விங்கைக் கட்டுப்படுத்தவே முடியல; 15 வயசுலயே இப்படி ஆடுறான், இன்னும் 25 வருஷம் கிரிக்கெட் வாழ்க்கை இருக்கேன்னு நினைச்சாலே பயமா இருக்கு” என்று SRH அணியின் உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் மிரண்டு போய் ஒப்புக்கொண்டுள்ளார்.

முத்துப்பாண்டியையே குத்துன கதையா, உலகத்தையே சைலன்ஸ் ஆக்கிய கம்மின்ஸையே சைலன்ஸ் ஆக்கி, சொடுக்கு பந்து, கட்டர், பவுன்சர் என அனைத்தையும் தனது புத்திக்கூர்மையால் சிக்ஸராகப் பறக்கவிட்ட இந்த அதிசய சூறாவளியை, செம ஃபார்மில் இருக்கும் போதே இந்திய அணியில் உடனே சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வெறித்தனமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்!