தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசைப் பற்றி ஓராண்டு வரை தான் எந்தவொரு விமர்சனமும் செய்யப் போவதில்லை என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், புதிய அரசுக்கு நாம் போதிய கால அவகாசம் தர வேண்டும் என்றும், எல்லாரும் மாறி மாறி விமர்சிப்பது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விசில் அடித்து வாக்களித்துள்ளதாகவும், தவெக அரசு அமைந்தது தங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய மாற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்லவர்களை நாம் நல்லவர்களாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசு மக்களுக்கு நியாயமாக நடக்க வேண்டும் என்றும் தந்து விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.