தமிழ் சினிமாவில் அஜித் குமாரின் 50-வது திரைப்படமாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மங்காத்தா’.
அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அமைத்த பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் ஆக உள்ளன.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் பல வருடங்களாக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘மங்காத்தா 2’ திரைப்படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே அந்தப் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும், கண்டிப்பாகக் கூடிய சீக்கிரமே ‘மங்காத்தா 2’ நடக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவர் பகிர்ந்துள்ள இந்த மங்காத்தா 2 தகவல் அஜித் ரசிகர்களைப் பயங்கர குஷியில் ஆழ்த்தியுள்ளது.
