கார்ப்பரேட் நிறுவனங்களில் லாஜிக்கே இல்லாத அலும்புகளும் விசித்திரமான விதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தேபலினா என்ற பெண் ஊழியர் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்கள் ‘சிக் லீவ்’ (Sick leave) எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரது மேலாளர், “இனிமேல் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போனால், அதற்கு முந்தைய நாள் இரவே மேலாளருக்குத் தகவல் தெரிவித்து லீவ் எடுக்க வேண்டும்” என ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

​பாஸின் இந்த விசித்திரமான விதியை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வச்சு செய்து வருகின்றனர். இதுகுறித்து தேபலினா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளைக்கு எனக்குக் காய்ச்சல் வரும் என்று எனக்கு இன்றே தெரிந்தால், அது ஒரு சூப்பர்பவர்! நான் அவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தால், இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்குப் பதிலாக நடப்பு ஐபிஎல் (IPL 2026) போட்டிகள் எவை ஜெயிக்கும் என ஜோசியம் சொல்லி கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பேனே” என நக்கலாகப் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “கார்ப்பரேட் நிறுவனங்களில் லாஜிக்கைத் தவிர மற்ற எல்லாமே நடக்கும்” என ஊழியர்கள் தங்களின் மெகா கொந்தளிப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.