நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் துபாயில் வாழும் இந்தியப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற ரியாலிட்டி ஷோ, தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துபாயைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதியான சதீஷ் சன்பால் மற்றும் அவரது மனைவி தபிந்தா சன்பால் ஆகியோரின் திருமண வாழ்க்கை முறைதான் நெட்டிசன்களைக் கடுமையாகக் கொந்தளிக்க வைத்துள்ளது. நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் பேசும் தபிந்தா, “நான் தினமும் காலையில் என் கணவர் சதீஷுக்குக் கால்களைப் பிடித்து விடுவேன்.
View this post on Instagram
கணவர் காலைத் தொட்டுக் கும்பிட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று அவர் நம்புகிறார்” எனப் பெருமையாகக் கூறியுள்ளார். மேலும், கணவனின் நகங்களை வெட்டி விடுவதுதான் உண்மையான அன்பு என்று கூறிய தபிந்தா, இந்த ஷோவில் கலந்துகொண்ட பிரபல நடிகை தேஜஸ்வி பிரகாஷிடமும் இதைச் செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், உடனே முகம் சுளித்த தேஜஸ்வி, “என்னால் இதையெல்லாம் செய்ய முடியாது” என்று முகத்திலடித்தாற்போல் மறுத்துள்ளார்.
இதற்கிடையே, தபிந்தாவின் கணவர் சதீஷ், தனக்கு மற்ற பெண்களுடன் பார்ட்டி செய்வது பிடிக்கும் என்றும், பெண்கள் தன்னை பார்ப்பதுதான் பெருமை என்றும் ஷோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதற்கும் முட்டுக் கொடுத்துப் பேசிய தபிந்தா, “என் கணவருக்குப் பெண்களுடன் நேரம் செலவிடப் பிடிக்கும்; ஆரம்பத்தில் எனக்குப் பொறாமையாக இருந்தாலும், இப்போது அவரை நம்புகிறேன்” என்று பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், தன்னிடம் 40 கிலோ தங்கம் இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தனக்குத் தனது கணவர் 3 கிலோ தங்கத்தைப் பரிசாகத் தருகிறார் என்றும் தபிந்தா தம்பட்டம் அடித்துள்ளார்.
இந்த காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள், 2026-லும் இப்படியா? எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பிற்போக்குத்தனமான புத்தியை மாற்ற முடியாது என்றும், இந்த ஷோ முழுக்க முழுக்கப் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தை வளர்க்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
