​கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, காவல்துறை மேற்கொண்ட இந்த அதிரடி வேட்டையைத் தனது பேட்டியின் மூலம் விவரித்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இருவரையும் போலீசார் சல்லடை போட்டுத் தேடிப் பிடித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

​”குற்றவாளிகளைத் தப்பிக்க விடமாட்டோம்” என்பது போல, மிகக் குறுகிய காலத்தில் இந்த வழக்கில் துப்பு துலக்கி, குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய காவல்துறைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காவல்துறையின் இந்த ‘மின்னல் வேக’ நடவடிக்கை மக்களிடையே ஓரளவு நிம்மதியையும், புதிய அரசின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது