அதிமுகவில் தவறு செய்தவர்கள் தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருவதாக, அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தாலேயே இந்தத் தீவிர முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தனது மகன் முக்கியப் பொறுப்பில் இருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
