அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வடுவூர் ராவணன் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜினாமாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வடுவூர் ராவணன், “டிடிவி தினகரனுக்கு சிபிஐ, இடி (CBI, ED) போன்ற சோதனைகள் வந்தபோது நாம் அவருக்காக எந்த அளவிற்குத் துடித்தோம், களத்தில் நின்றோம்; ஆனால், இப்போது நாம் தவெக-வுக்கு ஆதரவு கொடுத்தால் சிபிஐ, இடி-யை ஏவி விடுவோம் என்று அவர் நம்மையே மிரட்டுகிறார்” என்று அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
AMMK Members Resign | "தவெக-க்கு ஆதரவு கொடுத்தா CBI, ED-ஐ விடுவோம்னு TTV மிரட்டுறார்"வடுவூர் ராவணன் அதிரடி!#ttvdhinakaran #ammk #tnpolitics #bjp #tvk #cbi pic.twitter.com/aNRCM3kY6s
— ABP Nadu (@abpnadu) May 20, 2026
மேலும் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக எதிர்க்கும் திமுக கூட வெளியில் இருந்து எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர், முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ‘விஜயை குறைத்து மதிப்பிடக்கூடாது, அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால் தளபதியை குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று கூறிவிட்டு, இப்போது தவெக-வை ஆதரிப்பவர்களை மிரட்டுகிறார்” என்று டிடிவி தினகரனை ஓப்பனாக வம்புக்கு இழுத்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்
