பொதுமக்களிடம் ₹300 கோடி மோசடி செய்த புகாரில் தேடப்படும் குற்றவாளியான சிவக்குமார் என்பவர், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (KAS) முன்னிலையில் தவெகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் KAS, தான் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காகப் பல தரப்பினரும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி வந்த கூட்டத்தோடு கூட்டமாகத்தான் சிவக்குமாரும் வந்துள்ளார் என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதமான தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டத்தில் ஒருவராக வந்து வாழ்த்து சொன்னவரை, கட்சியில் இணைந்ததாகக் கூறி திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
