இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேகப்பந்து வீச்சாளரான சர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் அணிக்காக விளையாடிய உள்நாட்டுப் போட்டி ஒன்றின் போது, எல்லைக் கோட்டிற்கு அருகே உள்ள புதர்களுக்குள் புகுந்து தொலைந்து போன பந்தைத் தேடிய வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2024-ல் ஓய்வு பெற்ற 43 வயதான ஆண்டர்சன், தற்போது 2026 உள்நாட்டுப் பருவத்திற்காக லங்காஷயர் அணியின் கேப்டனாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான இந்த மல்டி-டே போட்டியின் போது, பந்து புதருக்குள் சென்றதால் மைதான ஊழியர்களுக்காகக் காத்திருக்காமல் அவரே நேரடியாகப் பந்தைத் தேடத் தொடங்கினார்.
இதைப் பார்த்த வர்ணனையாளர்கள், “புதருக்குள் யாரோ இருக்கிறார்கள், அவர்தான் இங்கிலாந்தின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்.. அவர் அங்கே என்ன செய்கிறார்?” என்று ஆச்சரியத்துடன் கிண்டலாகப் பேசும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பின்னர் சக வீரர் மற்றும் மைதான ஊழியர்களின் உதவியோடு பந்து மீட்கப்பட்டது. இந்த எதார்த்தமான மற்றும் வேடிக்கையான வீடியோ, உலகத்தரம் வாய்ந்த ஒரு ஜாம்பவான் வீரரின் எளிமையைக் காட்டுவதாக நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram
“>
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன், தனது வயதையும் பொருட்படுத்தாமல் லங்காஷயர் அணியை இந்த சீசனில் மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இவரது தலைமையின் கீழ் லங்காஷயர் அணி தற்போது டிவிஷன்-2 பிரிவில் வலுவான தொடக்கத்தைப் பெற்று, அடுத்த உயர் பிரிவுக்கு முன்னேறும் நோக்கில் தீவிரமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
