ஐபிஎல் 2026 நடப்புப் பருவத்தின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன், சென்னை ரசிகர்களை நோக்கிச் செய்த ஆக்ரோஷமான சைகை தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க சென்னை அணிக்கு இந்த வெற்றி அத்தியாவசியமானதாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மந்தமான ஆடுகளத்தில் தடுமாறி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றமளித்தார்.
181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி தூணாக நின்றது. மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களின் கூச்சலையும், அழுத்தத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிய இந்த ஜோடி, 4-ஆவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கிளாசென் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து உதவ, அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
Ishan Kishan had absolutely no hesitation.
Bro was literally telling the annoying CSK crowd to “enough, leave the stadium now” after SRH win. 🤣🔥 pic.twitter.com/K87gMCMZx6
— AdityaVarma (@AdityaVarma45_) May 19, 2026
வெற்றியைத் தொடர்ந்து இஷான் கிஷன் கொண்டாடிய விதம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையின் புகழ்பெற்ற “விசில் போடு” பாணியில் சைகை செய்த அவர், பின்னர் கைகளைக் காட்டி “எல்லாரும் கிளம்பி வீட்டிற்குப் போங்கள்” என்பது போல சென்னை ரசிகர்களை நோக்கி சைகை செய்தார். சேப்பாக்கம் மைதானத்தை அமைதியாக்கிய அவரது இந்த ‘செண்ட்-ஆஃப்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு தற்போது நூலிழையில் தொங்குகிறது. சிஎஸ்கே தனது கடைசிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்துவதுடன், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தங்களின் எஞ்சிய போட்டிகளில் தோற்க வேண்டும். அதன் பின்னரே நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ishan Kishan be like: Anni muskuni intiki ***geyandi ani antunaduu😂 pic.twitter.com/W6AIQKyqap
— strawberry (@ndukuchepali) May 18, 2026
