கடந்த தேர்தலில் திமுக மற்றும் விசிக கூட்டணியின் மிகப்பெரிய பலமாக இருந்த சிறுபான்மையினரின் வாக்கு வங்கி, இந்த முறை தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கம் பெருமளவில் சரிந்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஓப்பனாக ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திரைப்படங்களில் வெறும் ‘விஜய்’ என்று அறியப்பட்டவர், அரசியலுக்கு வந்தவுடன் ‘ஜோசப் விஜய்’ என்று திட்டமிட்டு பிராண்ட் செய்யப்பட்டதாகவும், இந்த பிராண்டிங் சிறுபான்மையினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வாக்கு மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​கிறித்தவ வாக்குகள் கிட்டத்தட்ட 80% தவெக பக்கம் ஒட்டுமொத்தமாக ஷிப்ட் ஆகியுள்ளதாகவும், இஸ்லாமிய வாக்குகளில் 60-70% மட்டுமே தங்களது கூட்டணியில் ரீடைன் ஆகி, மீதமுள்ள வாக்குகள் தவெக பக்கம் சென்றுவிட்டதாகவும் திருமா உடைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பே பாஜகவும் இதைக் கணித்துதான் தவெக சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கும் என்று அமைதி காத்தது என்றும், இந்த எதிர்பாராத வாக்கு வங்கிச் சிதறல்தான் தங்களது கூட்டணியின் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.