திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக-வில் திடீர் அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. மாவட்ட செயலாளர் வேதாச்சலம் தலைமையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். டிடிவி தினகரனுக்கு பலத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில், விலகிய அனைவரும் தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் எம்எல்ஏ, அமமுக மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் தவெகவில் ஐக்கியம் …!!#AMMK #TVK #MLA #CMvijay #TNpolitical #Newstamil24x7 pic.twitter.com/9ggz3rGM0q
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 17, 2026
இந்த இணைப்பின் போது அமமுகவினர் அனைவரும் உற்சாகமாக விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன்பாக திருவள்ளூரில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்த வேதாச்சலம் தவெக-விற்குச் சென்றிருப்பது, அந்தப் பகுதியில் விஜய்யின் அரசியல் பலத்தை பல மடங்கு உயர்த்திக்காட்டியுள்ளது.
