பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டிற்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற பயணிகளுக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த நண்பர்களில் ஒருவர் இயற்கை உபாதைக்காக கழிவறைக்குச் சென்றபோது, கம்மோடிற்குள் ஏதோ அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தண்ணீரை பிளஷ் செய்த அடுத்த நொடி, பைப் வழியாக ஒரு பெரிய பாம்பு தலை நீட்டியதைக் கண்டு அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்.

இதைப் பார்த்து மற்ற நண்பர்களும் மிரண்டு போக, உடனடியாக ரிசார்ட் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பு பிடிப்பட்டது.

காடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் இது போன்ற பாம்புகள் பாதாள சாக்கடை குழாய்கள் வழியாக கழிவறைக்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த திகிலூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இனிமேல் டாய்லெட் போகவே பயமா இருக்கு” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.