ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதலில் இந்தியத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உக்ரைன் ஏவிய நூற்றுக்கணக்கான டிரோன்கள் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடித்துச் சிதறியதில், அங்கு பணியில் இருந்த ஒரு இந்தியர் பலியானார் மற்றும் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரஷ்யாவிற்கான இந்தியத் தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
உயிரிழந்த இந்தியரின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், போர்க்களத்தில் இந்தியர்கள் உயிரிழக்கும் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
