தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் கே ராஜன் (85). இவர் பல விழாக்களில் கலந்து கொண்டு தன் மனதிற்குப்படும் கருத்துக்களை மிகவும் துணிச்சலாக கூறக்கூடியவர். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மச்சாரிகள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் தயாரிப்பாளராக மட்டுமின்றி சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது.