புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்காகப் பல நூறு கோடிகள் கைமாறுகிறதா என்ற புதிய சர்ச்சை அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பது தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதற்குப் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசுவதுதான் முக்கிய காரணம் என்றும், அமைச்சர் பதவிக்கு தற்பொழுது சுமார் 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி அதிரடி கிளப்பியுள்ளார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த அணு குண்டை வீசியுள்ளார்.
அதே சமயம், நடந்து முடிந்த தேர்தலில் தங்களது ஐஎன்டிஐஏ (I.N.D.I.A) கூட்டணி தோல்வியடைந்ததற்குக் கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்த ஒற்றுமையின்மைதான் மிக முக்கிய காரணம் என்றும் நாராயணசாமி ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார். ஒருபுறம் சொந்தக் கூட்டணியின் பலவீனத்தையும், மறுபுறம் ஆளுங்கட்சியின் மர்ம பேரங்களையும் நாராயணசாமி ஒரே மேடையில் போட்டுடைத்திருப்பது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி பயங்கர ரீச் கொடுத்து வருகிறது.
