ஆபீஸில் பாஸிடம் லீவு கேட்பதற்கு ஊழியர்கள் வழக்கமாக உடல்நலக்குறைவு அல்லது குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களைக் கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாலியா என்ற பெண் 10 நாட்கள் லீவு கேட்பதற்காக நெட்பிளிக்ஸ் ட்ரைலர் பாணியில் ஒரு அசத்தலான வீடியோவை உருவாக்கித் தனது பாஸிடம் காட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், பின்னணியில் அதிரடியான இசையுடன் ஒரு நேர்காணல் போன்ற சஸ்பென்ஸ் காட்சிகளை டாலியா அமைத்துள்ளார்.
இறுதியில், தான் பாலி தீவுக்குச் சுற்றுலா செல்ல 10 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று அவர் ட்விஸ்ட் வைத்தபோது, அதைப்பார்த்து அவரது பாஸ்கள் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திகைத்துப் போயினர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான இணையவாசிகள் ரசித்துப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “டாலியாவின் இந்த அசாத்திய திறமைக்கு அவர் நிச்சயம் ஆஸ்கார் விருது பெறத் தகுதியானவர்” என்றும், “இந்த கிரியேட்டிவிட்டிக்காகவே பாஸ் அவருக்கு லீவு கொடுத்துவிட வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவின் முடிவில் அவருக்கு விடுமுறை கிடைத்ததா இல்லையா என்பது சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தாலும், ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகக் கலாச்சாரம் இன்றைய கார்ப்பரேட் ஆபீஸ் வாழ்க்கையில் ஊழியர்களின் அணுகுமுறையை எவ்வளவு சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
