சென்னையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை இன்று திடீரெனக் குறைந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 குறைந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹120 அதிரடியாகக் குறைந்து ₹1,18,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது சற்றே சரிவைச் சந்தித்துள்ளது மிடில் கிளாஸ் குடும்பங்கள் மற்றும் திருமண வீட்டாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இதுவொரு செம்ம சான்ஸாகப் பார்க்கப்படுகிறது.
