தமிழக அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான நிர்வாகச் சீர்திருத்தங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், பத்திரப்பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாநிலம் முழுவதும் உள்ள 525 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மிகக் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இனி பத்திரப்பதிவு மற்றும் இதர பணிகளுக்காக வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைத்துப் பேசக் கூடாது என்றும், அவர்களை உரிய மரியாதையுடன் அமர வைத்துப் பேச வேண்டும் என்றும் அதில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு வரும் சாமானிய மக்கள் தங்களுக்குரிய அங்கீகாரத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு மார்டன் ‘வெல்கம்’ கிடைத்துள்ளது.
