மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.400 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கும், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு குறித்துப் பேசிய அவர், மத்திய அரசால் ஒரு தேர்வைக் கூட சரியாக நடத்த முடியவில்லை என்றும், மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடுமையாகச் சாடினார்.அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க 100 சதவீதம் முயற்சி செய்ததாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டார்.

ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட வேண்டாம் என சில தலைவர்கள் கொடுத்த ஆலோசனையால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதிமுகவின் சில முக்கியப் புள்ளிகள் த.வெ.க தலைவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஒரு சிலரைச் சூழ்நிலை கருதிச் சந்திப்பது மக்களுக்கு எதிரானதாக அமையும் என்பதால் அந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.