மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, வரும் மே மாதம் 15-ஆம் தேதிக்குள் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழலால் சாமானிய மக்கள் மீது விலை உயர்வு சுமை விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.