தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாக 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று ஒரே நாளில் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து பொதுமக்களை அதிரவைத்தது.
காலையில் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.8,560 வரை எகிறி, ஒரு சவரன் ரூ.1,23,200 என்ற உச்சத்தைத் தொட்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இந்த அதிரடி உயர்வைத் தொடர்ந்து மாலை நிலவரப்படி விலை சற்று குறைந்து நிம்மதியளித்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.10,000 வரை சரிந்து ரூ.3,20,000-க்கு விற்பனையாகிறது. காலையில் எகிறிய விலை மாலையில் சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்களிடையே ஒரு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
