தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டமன்றத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்துத்தான் நாங்கள் வாக்களிக்கப் போகிறோம்” என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
#WATCH | “தவெக அரசை ஆதரித்து வாக்களிக்கப் போறோம்”
சட்டமன்றத்திற்கு புறப்படுவதற்கு முன் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் #SunNews | #TNAssembly | #CVShanmugam | #TVKVijay pic.twitter.com/JDoOtyWXE6
— Sun News (@sunnewstamil) May 13, 2026
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மாற்றுக் கருத்துகள் நிலவி வரும் சூழலில், சி.வி.சண்முகத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தவெக அரசுக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரு மூத்த அரசியல்வாதியின் இந்த அதிரடி ஆதரவு சட்டமன்றத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
