ஆந்திர மாநிலம் நிந்த்யால் மாவட்டத்தில் பொன்னாபுரம் ரயில்வே கேட் அருகே இளைஞர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் தனது தற்கொலைக்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பின்னணி மற்றும் தற்கொலைக்கான துல்லியமான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மன அழுத்தம் அல்லது தனிப்பட்ட பிரச்சனைகளால் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவர்கள், உடனடியாக அரசு உதவி எண்களை அழைத்து ஆலோசனை பெறுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நிமிடம் சிந்தித்தால் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதே சமூகத்தின் கருத்தாக உள்ளது.
