அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான எஸ். காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாகச் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர் ஆதரவு அளித்ததே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கட்சியின் கொள்கைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

​சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதரவாகக் காமராஜ் செயல்பட்டது அமமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “கட்சி கட்டுப்பாடு மிக முக்கியம்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நீக்கம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மன்னார்குடி தொகுதியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் காமராஜ் நீக்கப்பட்டது, அமமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர் அடுத்தகட்டமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.