தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பு விழாவின் போது “நானும் தவறு செய்ய மாட்டேன், மற்றவர்களையும் தவறு செய்ய விடமாட்டேன்” என்று அதிரடியாகக் கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நடிகர் பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் காட்சியில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளும் பிரேம்ஜி, உதவி கேட்டு விஜய்க்கு போன் செய்கிறார்.
Our CM is very strict so all be good do good 💖🙏 pic.twitter.com/Cq5n7edmKo
— PREMGI (@Premgiamaren) May 11, 2026
ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட்! விஜய்யோ, “சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள், இல்லை என்றால் உங்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று போலீஸாருக்கு உத்தரவிடுகிறார். “Our CM is very strict” என்ற கேப்ஷனுடன் பிரேம்ஜி பகிர்ந்துள்ள இந்த வீடியோ, விஜய்யின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டோடு ஒத்துப்போவதாக நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
