ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது சுமார் 7 நீண்ட ஆண்டுகளுக்குப் பின், சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேலான ஒரு இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து (Chase) அசத்தியுள்ளது.

2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி கோப்பையை வென்றிருந்தாலும் கூட, 180+ ரன்களை சேஸ் செய்வதில் தொடர்ந்து தடுமாறியே வந்தது.

அந்த பலவீனத்தை தற்போது லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் தகர்த்தெறிந்துள்ள சிஎஸ்கே, 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டிப் பிடித்து தனது சேஸிங் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கிடைத்த இந்த வெற்றி, சென்னை அணியின் பழைய ‘சேஸிங் கிங்’ அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.