புற்றுநோயுடன் போராடும் தனது மனைவியின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், கணவர் ஒருவர் தானும் மொட்டை அடித்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. நம்ரதா நிதின் கோயல் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கீமோதெரபி சிகிச்சையின் காரணமாக அவரது கூந்தல் வேகமாக உதிரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் முடியைத் தொட்டாலே வலி எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதனால் வேறு வழியின்றி, தனது கூந்தலை முழுமையாக அகற்ற அவர் முடிவெடுத்தார்.

நம்ரதா பகிர்ந்த வீடியோவில், ஒரு நாற்காலியில் அமர்ந்து அவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். அவரது கணவர் மிகவும் அன்புடன் அவருக்கு உதவி செய்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென அந்தத் ட்ரிம்மரை கையில் எடுத்த கணவர், தனது தலையையும் மொட்டை அடித்துக் கொள்ளத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த நம்ரதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

 

 

View this post on Instagram

 

A post shared by Namarta Nitin Goel (@goelnamarta)

“நீ உனது முடியை மட்டும் வெட்டவில்லை, எனது துயரத்தையும் உனது தோளில் ஏற்றுக் கொண்டாய்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள், “உண்மையான அன்பிற்கு இலக்கணம் இதுதான்” என்றும், “ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டும்” என்றும் நெகிழ்ந்து வருகின்றனர். ஒரு நோய்க்கு மருந்து மாத்திரைகளை விட, அன்பானவர்களின் அரவணைப்பே சிறந்த சிகிச்சை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.