பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரும், பிக் பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவிடம் 10 கோடி ரூபாய் மிரட்டிப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, இரண்டு நாட்களுக்குள் 10 கோடி ரூபாய் தரவில்லை என்றால் எல்விஷையும் அவரது தந்தையையும் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
தன்னை பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி என்று அடையாளப்படுத்திக்கொண்ட அந்த நபர் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, குருகிராம் காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எல்விஷ் யாதவ் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வந்துள்ள இந்த புதிய கொலை மிரட்டல் வழக்கால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் உண்மையிலேயே தொடர்பு இருக்கிறதா அல்லது யாராவது விளையாட்டாகச் செய்தார்களா என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசாரும் அந்த அழைப்பு வந்த இடத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
