தமிழக அமைச்சரவையிலேயே மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி குறித்துத் தனது அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் அவர்கள் திறமையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தன்னைத் தேர்ந்தெடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “என்னைப்போல ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்த பெண், இந்த இளம் வயதிலேயே அமைச்சராக உயருவது வேறெந்த மாநிலத்திலாவது சாத்தியமா?” என அவர் எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
#WATCH | Chennai: Tamil Nadu Minister and TVK leader Selvi S. Keerthana says, "Everything is going to change, and the change is here. Thalapathy Chief Minister Joseph Vijay is here… Coming from such a middle-class family, getting such an opportunity as a candidate and being a… https://t.co/wdH1tBc7aq pic.twitter.com/fCuhXHCMcL
— ANI (@ANI) May 10, 2026
மேலும், முதல்வர் விஜய்யின் இந்த தொலைநோக்குப் பார்வையும், அவர் கொண்டு வரும் மாற்றங்களும் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார். விஜய் தலைமையிலான இந்த அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவித்த கீர்த்தனா, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் விஜய் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவார் என்றும் குறிப்பிட்டார். சாதாரணப் பின்னணியில் இருந்து வந்து அமைச்சராக உயர்ந்துள்ள கீர்த்தனாவின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
