தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காகச் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சற்றுமுன் புறப்பட்டார். இன்று காலை தனது இல்லத்தில் பெற்றோரின் ஆசியைப் பெற்றுக்கொண்ட அவர், அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குப் புறப்பட்டார்.
முதல்வராக பதவியேற்க நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்#TVK | #Vijay | #Chennai | #TVKVijay pic.twitter.com/elB7MmVP0e
— PttvOnlinenews (@PttvNewsX) May 10, 2026
விஜய் தனது இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “தமிழகத்தின் முதல்வரே” என முழக்கமிட்டு மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். நீலாங்கரை முதல் நேரு ஸ்டேடியம் வரை வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் முன்னிலையில் அவர் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளார். திரைத்துறையில் உச்சம் தொட்ட ஒரு கலைஞர், இன்று ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப் புறப்பட்ட இந்தத் தருணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
