தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு ‘ஹேப்பி நியூஸ்’ வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட 2 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணமாக, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் சென்டம் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதே சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால், டாப் கல்லூரிகளில் சீட் கிடைப்பதில் நிலவி வந்த கடும் போட்டி இந்த முறை சற்று குறையக்கூடும் என்பதால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் தங்களின் கட் ஆப் மதிப்பெண்களை வைத்து, TNEA இணையதளத்தில் கடந்த கால தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து, கவனமாகத் தங்கள் கல்லூரி விருப்பங்களை (Choice filling) பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.