சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ விசித்திரமான வீடியோக்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் இந்த வீடியோ பார்ப்பவர் எவரையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

ஒரு நபர் மரத்தின் தண்டு பகுதியைத் தனது பற்களாலேயே கடித்துக் குதறும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ பற்களால் கடிக்காமல், ஒரு இயந்திரம் அல்லது ரம்பத்தைக் கொண்டு மரத்தை அறுப்பது போல அந்த நபர் மிக லாவகமாக மரத்தைச் செதுக்குகிறார்.

இந்த விசித்திரமான செயலின் போது அவருக்கு எந்தவித வலியும் ஏற்படுவது போலத் தெரியவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்ட ஆச்சரியம். ‘androsbelfonte’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை பல மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர், மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை லைக் செய்துள்ளனர்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இவர் நிஜமாகவே மனிதர் தானா?” என்றும், “இவரது பற்கள் என்ன இரும்பால் செய்யப்பட்டதா?” என்றும் வாயடைத்துப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர். மனித உடலில் இவ்வளவு வலிமையா என வியக்க வைக்கும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் செம வைரல்.