பாட்னாவிற்குச் சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட கடும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் கொந்தளிப்பான சூழல் காரணமாக லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது. இந்த இக்கட்டான தருணத்தில், பாட்னா நாடாளுமன்ற உறுப்பினரும் அனுபவம் வாய்ந்த விமானியுமான ராஜீவ் பிரதாப் ரூடி அந்த விமானத்தை இயக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் மோசமான வானிலையால் விமானம் குலுங்கியபோது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர் விமானத்தை லக்னோ விமான நிலையத்தில் மிகவும் பத்திரமாகத் தரையிறக்கினார். பாட்னாவில் தரையிறங்க வேண்டிய விமானம் வானிலை சீரற்றதாக இருந்ததால் அங்கு தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

“>

“>

அப்போது விமானியாக இருந்த ராஜீவ் பிரதாப் ரூடி, தனது தொழில்முறை அனுபவத்தைப் பயன்படுத்தி சாமர்த்தியமாகச் செயல்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலில் ஒரு மக்கள் பிரதிநிதியே விமானத்தை இயக்கி பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்ததற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.