இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது 13 வயதிலேயே ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இருப்பினும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், வைபவ்வின் எதிர்காலம் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் வைபவ் 21 வயதுக்கு மேல் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்று வாகன் கணித்துள்ளார். இளம் வயதிலேயே அதிகப்படியான புகழும், சர்வதேச அளவிலான அழுத்தமும் ஒரு வீரரின் உடல்நலம் மற்றும் மனநிலையை பாதிக்கலாம் என்றும், இதனால் நீண்ட காலத்திற்கு விளையாடுவது சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மைக்கேல் வாகனின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுவயது திறமையாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும், காலப்போக்கில் காணாமல் போன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்தியமான திறமையை கண்டு வியப்பவர்கள், முறையான பயிற்சியும் வழிகாட்டலும் இருந்தால் அவர் இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழ்வார் என்று நம்புகின்றனர். இந்த எதிர்மறையான கணிப்புகளைப் பொய்யாக்கி, வைபவ் தனது கிரிக்கெட் பயணத்தை நீண்ட காலத்திற்குத் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
