சீனாவில் வாலிபர் ஒருவர், தனது மேல் வீட்டில் வசிப்பவர்கள் செய்யும் சத்தத்தால் பொறுமை இழந்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு விசித்திரமான கருவியை உருவாக்கியுள்ளார்.

ஒரு பிளாஸ்டிக் பந்தை கூரையில் படுமாறு பொருத்தி, அது இடைவிடாமல் மேல் வீட்டைத் தட்டும் வகையில் அவர் செய்துள்ள இந்த ஏற்பாடு, அந்த பக்கத்து வீட்டாருக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

பக்கத்து வீட்டாருக்கான உரிமைகள் அல்லது சட்டங்கள் குறித்து அந்த இளைஞருக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே, ஆனால் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அவர் செய்துள்ள இந்தச் செயல் தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.