சமூக வலைதளங்களில் ‘ஃபுட் எக்ஸ்பிரிமெண்ட்’ என்ற பெயரில் விதவிதமான உணவுகளைக் கலந்து புதுப்புது டிஷ்களை உருவாக்குவது இப்போது டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ உணவு பிரியர்களின் வயிற்றைக் கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஜூஸ் கடைக்காரர் ஒருவர் கரும்பு ஜூஸ் எடுக்கும் மெஷினில், கரும்போடு சேர்த்து மட்டர் பன்னீர் மசாலாவையும் போட்டு அரைக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், மற்றொரு வீடியோவில் கரும்பு ஜூஸின் மேலே சாஃப்டி ஐஸ்கிரீமை பிழிந்துவிட்டு, இது மிகவும் ‘ரிப்ரெஷிங்’ ஆக இருக்கும் என அந்த கடைக்காரர் கூறுகிறார்.
View this post on Instagram
இந்த வினோதமான கலவையைப் பார்த்த நெட்டிசன்கள், “வியூஸ்காக இப்படியா உணவை சித்திரவதை செய்வது? இனி இதில் ரொட்டியைத் தொட்டுத்தான் சாப்பிட வேண்டுமா?” என காட்டமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, “நரகத்தில் இவர்களுக்காகவே தனி எண்ணெய் சட்டி காய்ந்து கொண்டிருக்கிறது” என நக்கலாகப் பதிவிட்டு வருகின்றனர். கரும்பு ஜூஸில் மட்டர் பன்னீர் மிதக்கும் இந்தக் காட்சி, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.
