சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிறுவன் ஒருவன் கேட்ட கேள்விக்கு செம ஜாலியாக பதில் அளித்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுவன், “உங்களுக்கு பவுன்சர் மற்றும் பீமர் பந்துகளைப் பார்த்தால் பயமாக இருக்காதா?” என்று கேட்டான்.
அதற்கு ருதுராஜ், “ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி பயமா இருந்தது உண்மைதான். ஆனா, எனக்கு கல்யாணம் ஆன பிறகு, இப்ப பவுலர்களை விட என் பொண்டாட்டியைப் பார்த்தா தான் ரொம்ப பயமா இருக்கு” என்று கூலாக பதில் சொன்னார். இதைக் கேட்டு அங்கிருந்த வீரர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
<a href=”http://
“then I got married” got me 😭 pic.twitter.com/NVVMPcnj6H
— Ananya (@TheCricBird) May 4, 2026
“>
சிஎஸ்கே அணி இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் முக்கியமான போட்டியில் மோதவுள்ள நிலையில், இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கிடையில், காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத எம்.எஸ்.தோனி, இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ருதுராஜின் இந்த கலகலப்பான பேச்சு மைதானத்திற்கு வெளியேயும் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
