தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகைக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்தது, தமிழக அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.
Secretariat Office | தலைமைச் செயலகத்தில்.. காலியாகும் அமைச்சர்களின் அறைகள்.. #SecretariatOffice #chennai pic.twitter.com/xBCCQi3b3v
— Thanthi TV (@ThanthiTV) May 5, 2026
முடிவுக்கு வந்த ஸ்டாலின் ஆட்சி…. தலைமைச் செயலகத்தில் காலி செய்யப்படும் திமுக பொருட்கள்…. வைரலாகும் வீடியோ….!!
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் (Secretariat) தற்போது பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அமைச்சர்களின் அறைகளில் இருந்த அவர்களது உடமைகள், கோப்புகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களை காலி செய்யும் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் எக்ஸ் (X) தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. 50 ஆண்டு கால திராவிட அரசியலின் கோட்டையை ஒரு புதிய கட்சி தகர்த்துள்ள நிலையில், கோட்டை முழுவதும் தற்போது மாற்றத்திற்கான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
