தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மாபெரும் சுனாமியை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களையும் நிலைகுலையச் செய்து, அறிமுகத் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர பலத்துடன் எழுச்சி பெற்றுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் முஸ்தபா அவர்கள் அபார வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் மிக முக்கியமான முகங்களில் ஒருவரான திமுகவின் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி ஆகியோரைத் தோல்வியடையச் செய்து, முஸ்தபா இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். தென் தமிழகத்தில் தவெக-வின் இந்த வெற்றி அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தின் போது அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட நிலையில் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தினரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்த நிலையில் தற்போது அவர்களை ஏமாந்து விட்ட கதையாக தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் முஸ்தபா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
