தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தினர் வரலாறு காணாத அளவில் பல இடங்களை கைப்பற்றிய கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளை அந்த கட்சியின் வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளன.
சென்னையில் மட்டுமே அனைத்து தொகுதிகளையும் தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றும் நிலையில் இருக்கும் நிலையில் ஆர்கே நகர், மயிலாப்பூர் என பல தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் தற்போது ராயபுரம் தொகுதியை ஆட்டோ ஓட்டுனர் விஜய் தாமு கைப்பற்றியுள்ளார். மேலும் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் மீண்டும் ஒருமுறை தோல்வியை தழுவியது அந்த கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
