தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக-வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலேயே மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக துணை முதல்வரும், திமுக-வின் முக்கிய முகமுமான உதயநிதி ஸ்டாலின், தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 295 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
அங்கு உதயநிதி ஸ்டாலின் 3,464 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) வேட்பாளர் செல்வம் 3,754 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
