சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், “தேர்தலுக்குப் பிறகு கலவரங்கள் வெடிக்கலாம்” என ரெடிட் தளத்தில் பரவி வரும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள ஒரு நண்பர் தன்னிடம் கூறியதாக ஒரு பயனர் பகிர்ந்துள்ள அந்தப் பதிவில், ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற்றால் திட்டமிடப்பட்ட வன்முறைகள் நடக்கும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத கடைகள் குறிவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இது போன்ற பதற்றமான சூழல் நிலவுவதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் டிஜிபி ஜி.பி.சிங், “கவலைப்படாதீர்கள், நான் அங்கு இருப்பேன்” என்று உறுதியளித்து அமைதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பாதுகாப்பு கோரி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
<a href="http://

“>

தமிழகத்திலும் புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மோதல்கள் ஏற்படலாம் என சமூக வலைதளங்களில் யூகங்கள் பரவினாலும், அவை வெறும் வதந்திகளே என அதிகாரிகள் தரப்பில் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகளின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.