மும்பையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி அதிக தீயில் (High Flame) காய்ச்சும் போது, அது வழக்கத்திற்கு மாறாக பயங்கர வேகத்தில் நுரை ததும்பி பாத்திரத்தை விட்டு வெளியே பொங்கி வழிகிறது.
இதைப் பார்த்த பொதுமக்கள், பாலில் சோப்பு அல்லது வேதிப்பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டிருக்குமோ? என்ற அச்சத்தில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
What could be the Actual Reason for this?? pic.twitter.com/uMkWQkFbYx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 1, 2026
ஆனால், இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருப்பதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். மெல்லிய பாத்திரத்தில் அதிக வெப்பத்தில் பாலை காய்ச்சும் போது ‘சூப்பர் ஹீட்டிங்’ (Superheating) என்ற நிகழ்வு ஏற்பட்டு, பால் திடீரென பொங்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த வீடியோவால் கலப்பட பீதி ஒருபுறம் இருந்தாலும், “பாலை காய்ச்சும் போது எப்போதும் மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்” என இல்லத்தரசிகள் பலரும் அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
