இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி – லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கனரக லாரி, திடீரென சாலை உள்வாங்கியதால் அப்படியே பாதாளத்தில் சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது.
அந்த லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார் டிரைவர், சாலை திடீரென பிளந்து லாரி உள்ளே போவதை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து “ஐயோ” என அலறியுள்ளார்.
ஒருவேளை கார் டிரைவர் சுதாரித்து பிரேக் போடாமல் இருந்திருந்தால், காரும் லாரியுடன் சேர்ந்து அந்த பள்ளத்தில் விழுந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர் சமயோசிதமாக காரை பின்னோக்கி நகர்த்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
View this post on Instagram
மலைப் பிரதேசங்களில் பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் பலவீனமாக இருப்பதே இத்தகைய விபத்துக்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.
லாரியில் அதிக பாரம் ஏற்றப்பட்டிருந்ததால் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் சாலை அப்படியே நொறுங்கிவிட்டது. தற்போது ஜேசிபி எந்திரங்கள் மூலம் லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், “மலைப்பாதைகளில் பயணம் செய்யும் போது முன்னால் செல்லும் வாகனத்திற்கும் நமக்கும் கண்டிப்பாக இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்பதற்கு இதுவே சாட்சி” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
