ஷோயப் அக்தர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டைப் பார்க்கப்பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது; இவ்வளவு சிறிய வயதில் அவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது? நான் ஐபிஎல் தொடரில் விளையாடியவன் என்பதால் அதன் கடினமான தரம் எனக்குத் தெரியும்.

ஐபிஎல் என்பது உலகக் கோப்பைக்கு இணையானது, சொல்லப்போனால் அதைவிடப் பெரிய தொடர். அத்தகைய மேடையில் சர்வதேச பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்வது சாதாரண காரியமல்ல. எனது இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு திறமையை நான் பார்த்ததே இல்லை.

“>

 

அவரது பேட்டிங் உண்மையிலேயே நம்பமுடியாத வகையில் உள்ளது, வருங்காலத்தில் அவர் நிச்சயம் அனைவரையும் மிஞ்சிவிடுவார்” என்று மனதாரப் புகழ்ந்துள்ளார்.